பொன்னமராவதி வர்த்தகர் கழகம் சார்பில் 5 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

பொன்னமராவதி வர்த்தகர் கழகம் சார்பில்  5 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்: அமைச்சர் ரகுபதி  வழங்கல்
X

பொன்னமராவதி வர்த்தகர் கழகம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ 5 லட்சத்தில் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வர்த்தகர் கழகம் சார்பில் ரூ 5 லட்சத்தில் மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

வர்த்தகர் கழக மஹாலில் நடைபெற்ற மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழாவிற்கு வர்த்தகர் சங்கத் தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் முகமது அப்துல்லா அனைவரையும் வரவேற்றார்.

இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமரகண்டான் மருத்துவமனை மற்றும் காரையூர் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் பொதுமக்களின் பயன்படுத்தும் விதமாக ஒரு ஆக்ஸிஜன் செறிவூட்டி,இசிஜி மிஷின் இரண்டு, ஐசியு மல்டி மானிட்டர் ஒன்று, யூபிஸ் பேட்டரி செட் இரண்டு, அறுபது நீராவி மெஷின் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என ஐந்து லட்சம் மதிப்பினால மருத்துவ உபகரணங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் முன்னிலையில் வர்த்தகர் கழக சங்கத்தினர் வழங்கினர்.

இவ்விழாவில் மாநில வர்த்தகர் கழக பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்த ராஜூலு, மாநில வர்த்தகர் கழக பேரமைப்பு துணைத் தலைவர் சீனு சின்னப்பா, புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழக தலைவர் சாகுல் அமீது, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலைவாணி, சுகாதார பணிகள் இணை இயக்குநர் ராமு, தாசில்தார் ஜெயபாரதி,

மற்றும் கட்சி நிர்வாகிகள் வர்த்தக சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் மேலும் இவ்விழாவில் 50 தூய்மைபணியாளர்கள் டெங்கு பணியாளர்கள் குடும்பத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் சார்பில் முடி திருத்தும் பணியாளர்கள் 30 பேருக்கு ரூ 10 ஆயிரம் மதிப்பில் சானிடைசர், முகக்கவசம் மற்றும் பேஸ் ஷீல்டு அமைச்சரால் வழங்கப்பட்டது.

பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்த்தல் தனிநபர் கழிப்பறை கட்டுதல் உபயோகப்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு வழங்கி ஓராண்டாக தொண்டாற்றிய ஸ்வஸ்திக் தொண்டு நிறுவன நம்நல்வாழ்வு திட்ட பணியாளர்கள் 12 பேருக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கு சான்றிதழ்களை அமைச்சர் ரகுபதி வழங்கினார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!