புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செரிவூட்டி வழங்கல்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செரிவூட்டி  வழங்கல்
X

 புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்களை மருத்துவர்களிடம் வழங்கபட்டது.

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் திருமயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செரிவூட்டி வழங்கப்பட்டது.

ஏசிடி கிராண்ட்ஸ், ஸ்வஸ்த் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3000த்தின் சிறப்புத் திட்டத்தின்கீழ் ரூபாய் 1,25,000 மதிப்புள்ள ஆக்ஸிஜன் செரிவூட்டியினை புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் திருமயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் பெர்லின் தாமஸ் தலைமை தாங்கினார். சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் வெங்கடாசலம், மருத்துவர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், பொருளாளர் கதிரேசன், உடனடி முன்னாள் தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, ரோட்டரி துணை ஆளுநர் சிவாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆக்ஸிஜன் செரிவூட்டியினை வழங்கினர். இதனை மருத்துவர்கள் ரமேஷ், கார்த்திகேயன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்