புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே  நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி
X

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை உடன் மல்லுக்கட்டும் வீரர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 600 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன

தமிழகத்திலேயே அதிகப்படியான ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் அதிகளவில் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் நடைபெறுகிறது..

மேலும் தற்பொழுது பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளும் மஞ்சவிரட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னமராவதிஅருகே

ஆர். பாலக்குறிச்சியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் புதுக்கோட்டை திருச்சி, தஞ்சாவூர், மதுரை ,உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டுவரப்பட்டு பொன்னமராவதி அருகே உள்ள ஆர். பாலக்குறிச்சி பகுதியில் உள்ள மிகப்பெரிய திடலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 600க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றது.மேலும் அங்கங்கே அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் மல்லுக்கட்டி அடக்க முற்பட்டனர். மேலும் வீரர்கள் பிடியில் சிக்காமல் துள்ளிக்குதித்து காளைகள் ஓடியது மஞ்சுவிரட்டு போட்டியை காண்பதற்காக ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்