முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அமைச்சரிடம் மேலப்பனையூர் தலைவர் காசோலை வழங்கினார்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அமைச்சரிடம் மேலப்பனையூர் தலைவர் காசோலை வழங்கினார்
X
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் நிவாரணநிதிக்கு மேலப்பனையூர் பஞ்சாயத்து தலைவர், அமைச்சர் சகுபதியிடம் காசோலை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலப்பனையூர் ஊராட்சி சார்பில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்க முன்வந்தனர். அதன்படி ஊராட்சி மன்ற தலைவர் ரூ.9 ஆயிரம், ஊராட்சி துணைத்தலைவர் ரூ.1000, ஊராட்சி உறுப்பினர்கள் ரூ.4 ஆயிரம், ஊராட்சி செயலர் ரூ.1000 மற்றும் மேலப்பனையூர் ஊராட்சியில் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்யும் கிராம மக்கள் தங்களின் அரை நாள் சம்பளமாக ரூ.45 ஆயிரம் நன்கொடையாக வழங்கினர்.

இதனை மேலப்பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன் ஊராட்சி சார்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் ரூ.60 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

அப்போது திருமயம் ஒன்றிய பொறுப்பாளர் சிதம்பரம், அரசு ஒப்பந்ததாரர் சீமானூர் கணேசன், ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!