சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டிக்கு உதவிய காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டிக்கு உதவிய காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு
X

பொன்னமராவதியில் சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு.

சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு.

சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டி உயிரை காப்பாற்றிய காவலர்களுக்கு பொது மக்கள் பாராட்டுத் தெருவிப்பு. சிவகங்கை மாவட்டம் கிழவயல் பகுதியை சேர்ந்த பாப்பா வயது 80 என்ற மூதாட்டி கடந்த சில மாதங்களாக பொன்னமராவதி வழி தடுமாறி சுற்றி திரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி பாப்பா வலையபட்டி காந்தி ஜி ரோட்டில் நிலை தடுமாறி விழுந்து தலையில் காயத்துடன் கிடந்ததை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த பொன்னமராவதி காவல் நிலைய தலைக்காவலர் செந்தில் மற்றும் முதல் நிலைக்காவலர் மதியழகன் ஆகியோர் தலையில் காயமடைந்து சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூதாட்டி பாப்பா பற்றிய விபரங்களை காவலர்கள் உறவினரிடம் தெரிவித்தனர். சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டி பாப்பாவை தக்க சமயத்தில் மீட்டு உயிரைக் காப்பாற்றிய காவலர்களின் இச்செயலை பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!