ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சியை திருமயம் சட்டமன்ற தொகுதியில் இணைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சியை திருமயம் சட்டமன்ற தொகுதியில் இணைக்க பொதுமக்கள் கோரிக்கை
X

ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சியை திருமயம் சட்டமன்ற தொகுதியில் இணைக்க வேண்டுமென  இணைக்க திமுக ஒன்றிய செயலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.   

ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஆறு ஊர்களையும் திருமயம் சட்டமன்ற தொகுதியிலேயே இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக வருவாய்த்துறையை பொன்னமராவதி தாலுகாவிலும், சட்டமன்ற தொகுதியை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலும் வைத்துள்ளனர்.

இதில் சட்டமன்ற தொகுதியை திருப்பத்தூரிலிருந்து பிரித்து திருமயத்தில் இணைக்க கோரியும், காவல் நிலையத்தை உலகம்பட்டி காவல் நிலையத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் இணைக்க கோரியும் ஆர் பாலகுறிச்சி ஊராட்சியில் உள்ள ஆறு கிராமத்தையும் இணைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள திமுக ஒன்றியச்செயலாளரும், ஒன்றிய சேர்மன் சுதாஅடைக்கலமணியிடம் இன்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வழங்கினர். மேலும் மனுவில் கூறப்பட்டிருப்பது: ஆர். பாலக்குறிச்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 1979 வரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட திருமயம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு அளித்து வந்த நிலையில், அதன் பிறகு தற்போதுவரை அருகிலுள்ள சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் இணைத்து வாக்களித்து வருகின்றனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சட்டமன்ற தொகுதிக்கான நலத்திட்டங்கள் எதுவும் கிடைப்பதில்லை எனவும் மீண்டும் ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஆறு ஊர்களையும் திருமயம் சட்டமன்ற தொகுதியிலேயே இணைக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.


Tags

Next Story
நாமக்கல் அருகே முட்டை வாகனம் கவிழ்ந்து விபத்து..!