தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா விற்ற ஒருவர் கைது

தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா விற்ற ஒருவர் கைது
X
பொன்னமராவதி பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா விற்ற ஒருவர் கைது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் கொரோனா ஊரடங்கு சமயங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பொன்னமராவதி இந்திராநகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மகன் ரமேஷ்குமார் . என்பவரை வழிமறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான்மசாலா உள்ளிட்டவை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான போலீசார் வண்டியை முழுவதும் சோதனையிட்டுட்டனர்.

அதில் 57 ஆயிரத்து 150 ரூபாய் மதிப்பிலான பான்மசாலா குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பொன்னமராவதி காவல் உதவி ஆய்வாளர் வீரமணி பறிமுதல் செய்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

Tags

Next Story