பொன்னமராவதி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம்
பொன்னமராவதி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் சேதுராமன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய துணைத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர் கணேசன் வரவேற்றார். முன்னாள் ஒன்றிய தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிவசாமி கண்டியர், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரன், மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் பாலா ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சராக பதவியேற்ற எல்.முருகன் மற்றும் மாநிலத் தலைவராக பதவியேற்ற அண்ணாமலை ஐபிஎஸ் ஆகியோர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பொன்னமராவதி பகுதி மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்களை அலைகளிப்பதை கண்டிப்பதோடு ஒவ்வொரு கிராமங்களிலும் தடுப்பூசி முகாம் நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொள்ளப்பட்டது.
பொன்னமராவதி பகுதிகளில் அடிக்கடி நடைபெற்று வரும் மின்வெட்டை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளில் உள்ள கோவில் மற்றும் கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
திருக்களம்பூர்ஊராட்சி பெரிய கண்மாய்க்கு விவசாயத்திற்கு பயன்படும்படி வைகை ஆற்று தண்ணீர் வரும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். வார்பட்டு பஞ்சாயத்தில் பிரான்மலை அடிவாரத்தில் ஒரு நீர்த்தேக்கம் அமைத்து அதன் மூலம் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு ஏற்ப ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திக், ஒன்றிய செயலாளர் சக்திவேல் துணைத் தலைவர்கள் பெரியசாமி, சிவகுமாரிராசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், வெள்ளைச்சாமி, மலைச்சாமி, மேலைச்சிவபுரி அர்ஜுணன் சின்னையா, ஆனந்த், வெங்கட்ராமன் விஜயகுமார் தர்மராஜா கருப்பையா, ராமஜெயம் அருண் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu