பொன்னமராவதியில் ஆக. 9ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம்

பொன்னமராவதியில் ஆக. 9ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம்
X

பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே மனிதச் சங்கிலி போராட்டம் குறித்த பிரச்சார இயக்கம் இன்று நடைபெற்றது.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில் விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற உள்ள மனிதச்சங்கிலி போராட்டத்தை விளக்கி பொன்னமராவதியில் பிரச்சார இயக்கம் இன்று நடைபெற்றது.

பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற பிரசார இயக்கத்திற்கு சிஐடியு தீன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சாத்தையா, ஒன்றிய தலைவர் பிச்சை ஆகியோர் தலைமை வகித்தனர்.

விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் பகுருதீன், மாயழகு மற்றும் கட்சி நிர்வாகிகள் பாஸ்கர், நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், அண்ணாசாலை, காந்தி சிலை, நாட்டுக்கல் பகுதிகளில் பிரச்சாரத்தை விளக்கி பொதுமக்களிடம் பிரசுரங்களை வழங்கினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!