திருமயம் அருகே பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழா

திருமயம் அருகே பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழா
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு  பொங்கல் கூடை ஊர்வலம் நடைபெற்றது. 

பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஊர் பொங்கல் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் கோனார்கருப்பர் சாமி கோவில் வள்ளிலிங்கம் சுவாமி கோவிலில் பொங்கல் படையல் விழா பொங்கல் கூடை ஊர்வலம் நடைபெற்றது.

இதில் கோனார்கருப்பர் சாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை செய்யப்பட்டது.பின்பு ஏராளமான பொதுமக்கள் பெண்கள் தலையில் பொங்கல் கூடை சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரியகளம் பொங்கல் தளத்தில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பின்பு மஞ்சுவிரட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!