பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர் -அகற்றிய காவல்துறையினர்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்  -அகற்றிய  காவல்துறையினர்
X
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பிரம்மாண்ட பிளக்ஸ் பேனரை அகற்றிய காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் திருமயம் பேருந்து நிலையம் பகுதியில் தனியார் கட்டிடத்தில் இருந்த மிகப்பெரிய விளம்பரப் பேனர் பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்த விழும் நிலையில் இருந்தது.

இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனை அகற்ற சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் யாரும் முன்வராததால் தகவலறிந்த திருமயம் ஊராட்சி நிர்வாகம் உதவியுடன் திருமயம் போலீஸார் சேதமடைந்த விளம்பரப் பேனரை அகற்ற முன் வந்தனர். இதனை தொடர்ந்து காற்றில் சேதமடைந்த விழும் நிலையில் இருந்த விளம்பரப் பேனரை காவல்துறையினர் அந்த பேனரை அகற்றினர். பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த விழும் நிலையில் இருந்த விளம்பரப் பேனரை அகற்றிய காவல்துறைக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!