தமிழகத்திற்கு புதிய ஆளுநர்: கருத்து தெரிவிக்க ப. சிதம்பரம் மறுப்பு

தமிழகத்திற்கு புதிய ஆளுநர்: கருத்து தெரிவிக்க ப. சிதம்பரம் மறுப்பு
X

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களை அதிகமாக சேர்க்க வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசும் போது, காங்கிரஸ் கட்சியில் மற்ற கட்சிகளை போல் இளைஞர்கள் அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு, மூத்த நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர், புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். காங்கிரஸ் கட்சியில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறினார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்களை தமிழக முதலமைச்சர் நிறைவேற்றுவதை நான் பாராட்டுகிறேன். தமிழகத்தில் புதிய ஆளுநரை நியமனம் பற்றி இப்போது கருத்து கூற முடியாது என்றார்.ழ

Tags

Next Story