திருமயத்தில் விபத்தை ஏற்படுத்தக்கூடிய பயணியர் நிழற்குடை யை அகற்ற வேண்டும்

திருமயத்தில் விபத்தை ஏற்படுத்தக்கூடிய  பயணியர் நிழற்குடை யை அகற்ற வேண்டும்
X

திருமயம் பெருமாள் கோயிலில் இருந்து கடியாபட்டி செல்லும் சாலையில் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டும் என்றாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படுத்திய கூடிய வகையில் இருக்கும் பயணியர் நிழற்குடை

விபத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ள இந்தப் பயணியர் நிழற்குடை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருமயம் பெருமாள் கோயிலிருந்து கடியாபட்டி செல்லும் வழியில் விபத்தை ஏற்படுத்த கூடிய வகையில் மிகவும் பழுதடைந்துள்ள பயணியர் நிழற்குடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில் உள்ளது. ஆண்டு தோறும் இக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகும்.இந்நிலையில் இன்னும் சில நாட்களில் இக் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருவார்கள்

இந்நிலையில் பெருமாள் கோயிலில் இருந்து கடியாபட்டி செல்லும் சாலையில் உள்ள பயணியர் நிழற்குடை மிகவும் பழுதடைந்து விபத்தை ஏற்படுத்த கூடிய அளவில் உள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் இந்த பயணியர் நிழற்குடை தூண்களில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படுத்திய கூடிய அளவில் பழுதடைந்து உள்ளது.

திருமயம் பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு பொதுமக்கள் அதிக அளவில் வருவதாலும் பேருந்துக்காக இந்த பயணியர் நிழற்குடை காத்திருந்து பயணம் செய்வார்கள் என்பதாலும் தற்போது புதுக்கோட்டையில் கனமழை பெய்து வருவதால், இந்த பயணியர் நிழற்குடை எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளது.

எனவே சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு முன்னதாக பழுதடைந்து விபத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ள இந்தப் பயணியர் நிழற்குடை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business