திருமயம் ஊராட்சியில் 55 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணை

திருமயம் ஊராட்சியில் 55 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணை
X
வீடு கட்டுவதற்கான ஆணைகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
திருமயம் ஊராட்சியில் 55 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடியில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணையினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடியில் 2021-22 ஆம்ஆண்டு பிரதம மந்திரி வீடு வழங்கும் ஊரகம் திட்டத்தின்கீழ் 55 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து லெம்பலக்குடி ஆதிதிராவிடர் குடியிருப்பில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் ரூ.2 கோடி மதிப்பில் 21 வேலைகள் துவங்கப்படவுள்ளது.

15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.20.73 லட்சம் மதிப்பீட்டில் 9 வேலைகள் துவங்கப்படுவதற்கான கருத்துருவும் அனுப்பப்பட்டுள்ளது. 75 சதவீதம் குவாரி சீனியரேஜ் திட்டத்தின்கீழ் ரூ.62.98 லட்சம் மதிப்பீட்டில் 5 வேலைகளுக்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

எனவே நலத்திட்ட உதவிகளை பெறும் பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அழகு(எ)சிதம்பரம், பழனிவேல், ஊராட்சிமன்றத் தலைவர் பாலு, கருப்பையா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil