புதுக்கோட்டை அருகே பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை: அமைச்சர் வழங்கல்

புதுக்கோட்டை அருகே பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை: அமைச்சர் வழங்கல்
X

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலியில் நடந்த விழாவில் ஒரு பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வாங்கினார்

விராச்சிலையில் ரூ. 10 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பூமி பூஜை போடப்பட்டது

திருமயம் ஒன்றியம் விராச்சிலையில் நடந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 9 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், விராச்சிலையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்து 9 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு பிரேம்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு ( எ) சிதம்பரம் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு