கண்சிகிச்சை பரிசோதனை முகாம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடக்கம்
திருமயம் தொகுதி மேலப்பனையூர் கிராமத்தில் நடைபெற்ற கண்பரிசோதனை முகாமை தொடக்கி வைத்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பனையூர்ஊராட்சியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாமினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்தார்.
பின்னர்சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவத்துறையில் மகத்தான சாதனைகளை படைத்து வருகிறார்.மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தந்ததால் மக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று சிகிச்சைகான மருந்து, மாத்திரைகளை வழங்க வழிவகை செய்துள்ளார்.இந்த சிறப்பான திட்டத்திற்கு முன்னோடித் திட்டம் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டமாகும். பொதுமக்களை அதிகளவில் முகாம்களில் கலந்துகொள்ளச் செய்து, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு இத்திட்டம் பெரும்வரப்பிரசாதமாகும். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்தவ முகாம்களையும் தமிழ்நாடு முழுவதும் நடத்தச் செய்து பொதுமக்களின் நலன் காத்து வருகிறார்கள்.
மேலப்பனையூர் ஊராட்சியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆகியோர் இணைந்து இந்த இலவச கண் பரிசோதனை முகாமினை நடத்துவது பாராட்டுக்குரியது. இதுபோல் அனைத்து ஊராட்சிமன்றத் தலைவர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார் அமைச்சர் ரகுபதி.இந்த நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், மேலப்பனையூர் ஊராட்சிமன்றத் தலைவர் மேகநாதன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மோதிலால், அசோக், சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu