புதிய கலையரங்கம்.: காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் திறந்து வைப்பு

புதிய கலையரங்கம்.: காங்கிரஸ்  எம்பி கார்த்திக் சிதம்பரம் திறந்து வைப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் புதிய கலை அரங்கத்தை திறந்து வைத்த காங்கிரசிஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் கடியாபட்டி கிராமத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 5 .5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கத்தையும், அதேபோல் கே புதுப்பட்டி கிராமத்தில் உள்ள கழனிவாசல் அரசுமேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 5 .5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கத்தை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் ராமசுப்புராம் வட்டார தலைவர் அர்ஜுனன் வட்டார தலைவர் வீரப்பன் அரிமளம் ஒன்றிய குழு தலைவர் மேகலா்முத்து,மாவட்ட கவுன்சிலர் கலைவாணி சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர்கள் தனலட்சுமி மெய்யப்பன் காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் இப்ராஹிம், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் செல்லையா ,புதுப்பட்டி கணேசன் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
future of ai in retail