திருமயம் கோட்டையில் இயற்கை பேரிடர் ஒத்திகை
திருமயம் கோட்டையில் இயற்கை பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டையில், 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பில் நடைபெற்றது. இந்த இயற்கை பேரிடர் ஒத்திகை நிகழ்வினை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி இன்று பார்வையிட்டார்.
75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, புராதான சுற்றுலாதலங்களை இயற்கை பேரிடர் காலங்களில் பாதுகாக்கும் வகையிலும், சுற்றுலாதலங்களை பார்வையிட வருகை தரும் பொதுமக்கள் இயற்கை பேரிடர் காலங்களில் கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இயற்கை பேரிடர் ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டையில், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பில் நடைபெற்ற இயற்கை பேரிடர் ஒத்திகை நிகழ்வு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை, மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை, தொல்லியல்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களின் முன்னிலையில் பூகம்பம், வெள்ளம், புயல் போன்றவைகளால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் மற்றும் நீர்நிலைகளில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி அளிக்கும் ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
மேலும் இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களின் போது பொதுமக்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் மற்றும் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு நிலைய தலைமை ஒருங்கிணைப்பாளர் ரோஹித்குமார், தொல்லியல்துறை அலுவலர் விக்னேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu