மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
X

திருமயம் ஒன்றிய தி.மு.க. சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருமயத்தில் தி.மு.க. சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமயம் ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு திருமயம் அருகே உள்ள தாமரை கண்மாயில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த மஞ்சுவிரட்டு விழாவில் 14 காளைகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்றன குறிப்பாக புதுக்கோட்டை தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 14 காளைகள் பங்கேற்றது.

அதேபோல் மாடுபிடி வீரர்களும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வீரர்களும் பங்கேற்றனர். இந்த மஞ்சவிரட்டு போட்டியில் ஒவ்வொரு காளைகளுக்கும் 20 நிமிடங்கள் ஒதுக்கப்படும் மைதானத்தின் நடுவில் காளைகள் கட்டப்பட்டு 9 காளையர்கள் ஜல்லிக்கட்டு காளையை அடக்க முற்படுவார்கள்.

இந்த போட்டியில் ஒரு சில வீரர்கள் காளைகளை அடக்கினர்.ஒரு சில காளைகள் வீரர்களை பிடியில் சிக்காமல் வீரர்களை குத்தி தூக்கி எறிந்தது.

தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை காண்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்று கைதட்டி விசிலடித்து வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை கண்டு களித்தனர்.

இந்த மஞ்சவிரட்டு போட்டிகளை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி தி.மு.க. வினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்