சர்க்கரை நோய் விழிப்புணர்வுஆலோசனை முகாமை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி

சர்க்கரை நோய் விழிப்புணர்வுஆலோசனை முகாமை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி
X

இலவச சர்க்கரை நோய் விழிப்புணர்வு இரத்த சர்க்கரை பரிசோதனை ஆலோசனை முகாமை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி.

திருவேங்கைவாசல் ஊராட்சி அலுவலகத்தில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது

இலவச சர்க்கரை நோய் விழிப்புணர்வு இரத்த சர்க்கரை பரிசோதனை ஆலோசனை முகாமை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி.

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப்பணித் திட்டம், துரைசாமி நர்சிங் ஹோம் இணைந்து திருவேங்கைவாசல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இலவச சர்க்கரை நோய் விழிப்புணர்வு இரத்த சர்க்கரை பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் மருத்துவர் துரை நாகரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக அரசினர் தொழிற்பயிற்சி நிலைய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜோதிமணி வரவேற்றார் . நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய உதவி பயிற்சி அலுவலர்கள் யோகச்சந்திரன், முருகானந்தம், ரமேஷ், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க மேனாள் தலைவர் பார்த்திபன், பொருளாளர் செந்தில்வேல் முன்னிலை வகித்தனர். விழாவில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு உறுப்பினர் மாருதி கண.மோகன்ராஜா செய்திருந்தார் நிறைவாக நிலைய உதவி பயிற்சி அலுவலர் ரெங்கராஜன் நன்றி கூறினார்

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது