திருமயம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி

திருமயம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி
X

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.

திருமயம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துலையானூர் மங்களா நாச்சி அம்மன் மற்றும் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஐந்து ஊரார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது .

இதில் ஆத்தங்குடி ,கோனபட்டு, திருப்பத்தூர் ,காரைக்குடி, திருமயம், பள்ளத்தூர், உள்பட பல்வேறு பகுதியில் இருந்து150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

இதில் முதன்முதலாக கோவில் காளைகளை களத்தில் இறக்கினார்கள் பின்னர் மற்ற காளைகளை ஒவ்வொன்றாக களத்தில் இறக்கி விட்டனர்.களத்தில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் விரட்டி மடக்கிப் பிடித்தனர்.

சில காளைகள் யாருக்கும் பிடிபடாமல் ஓடியது. நிகழ்ச்சியில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவ குழுவினர் அமைக்கப்பட்டிருந்தன.மேலும் கால்நடைகளுக்கு பரிசோதனை செய்திட கால்நடை மருத்துவ குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர் .

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண துலையானூரை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்து பார்வையிட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!