பொன்னமராவதியில் ரூ.65 லட்சம் மதிப்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடக்கம்
பொன்னமராவதியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணியினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்
பொன்னமராவதியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணியினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி, அம்மன்கோயில் வீதியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணியினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தேர்வு நிலை பேரூராட்சி, அம்மன்கோயில்; வீதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை (சிமெண்ட் கல் தளம்) மற்றும் வடிகால் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.அதனை தொடர்ந்து பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில், பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் புதிதாக கடன் கோரி விண்ணப்பித்த 7 நபர்களுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.70,000 மும், முதல் கடன் தொகை கட்டி முடிக்கப்பட்டு, இரண்டாம் கட்டம் விண்ணப்பித்த 2 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 வீதம் ரூ.40,000 மும் என மொத்தம் ரூ.1,10,000 மதிப்பில் வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இக்கடனுதவியினை பெறும் சாலையோர வியாபாரிகள் இதனை தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, முத்து, செயல் அலுவலர் கணேசன், வீடு கட்டும் கூட்டுறவு சங்க இயக்குநர் அழகப்பன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu