கனிமொழி எம்பி பிறந்தநாள்: பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய திமுகவினர்

கனிமொழி எம்பி பிறந்தநாள்: பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய திமுகவினர்
X

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக மகளிரணி தலைவி எம்பியுமான கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு லட்டு மற்றும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசங்கள்  வழங்கி பிறந்தநாளை கொண்டாடினார்

பயணிகள் பொதுமக்களுக்கு லட்டு மற்றும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முகக்கவசம் ஆகியவற்றை திமுக நிர்வாகிகள் வழங்கினர்

திமுக எம்பி கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினர்.

தமிழகம் முழுவதும் திமுக மகளிரணி தலைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு திமுக மகளிரணி சார்பில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி தலைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு, பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் பொதுமக்களுக்கு லட்டு மற்றும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முகக்கவசம் ஆகியவற்றை திமுக நிர்வாகிகள் வழங்கினர்.

இதில் பொன்னமராவதி ஒன்றிய தலைவர் சுதா அடைக்கலமணி, புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் துணைச் செயலாளர் சின்னையா ஆகியோர் தலைமை வகித்தனர்.அவைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி, பொதுகுழு உறுப்பினர் தென்னரசு, ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் விஜயா, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் காளிதாஸ், விகாஸ், ராமையா, அப்பாஸ், மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர், ஆலவயல் முரளிசுப்பையா, ஆரிப், சித்தன், தீபக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!