ஜல்லிக்கட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 9 பேர் மீது வழக்கு

ஜல்லிக்கட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 9 பேர் மீது வழக்கு
X

குலமங்கலம் ஜல்லிக்கட்டு பைல் படம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குலமங்கலம் மலையகோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடுபிடி வீரர்கள் 600க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஜல்லிக்கட்டு திடலில் கூடினர். தமிழக அரசு அறிவித்திருந்த கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திய விழா குழுவினர் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக அரசு வழங்கியுள்ள வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை பின்பற்றாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திய விழாக் குழுவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai solutions for small business