திமுக வேட்பாளர் ஆதரவாளர் வீட்டில் ஐடி ரெய்டு

திமுக வேட்பாளர் ஆதரவாளர் வீட்டில் ஐடி ரெய்டு
X

திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்கு உட்பட்ட வி .கோட்டையூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் ராமதிலகம் மற்றும் அவரது கணவர் மங்கள ராமன் துணைத் தலைவராகவும் இருந்து வருகின்றனர். இவர் திமுக சார்பில் போட்டியிடும் ரகுபதியின் ஆதரவாளராக இருக்கிறார். இந்நிலையில் இன்று அவருடைய வீட்டில் 5 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் திடீரென சோதனை மேற்கொள்ள வந்தனர். அப்பொழுது வீட்டின் உள்ளே சென்ற அதிகாரிகள் வீட்டில் இருந்தவர்களிடம் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டு வீடு முழுவதும் சோதனை செய்தனர்.

வாக்காளர்களுக்கு பணம் எதுவும் கொடுப்பதற்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற அடிப்படையில் சோதனை நடைபெற்றது. சோதனையில் எதுவும் சிக்காததால் ஒன்றும் கிடைக்காமல் வருமானவரித் துறையினர் திரும்பிச் சென்றனர். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக, திமுக பிரமுகர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்