தோட்டக்கலைத்துறை மூலம் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை அறிமுகம்

தோட்டக்கலைத்துறை மூலம் நடமாடும் காய்கறி,  பழங்கள் விற்பனை  அறிமுகம்
X

தோட்டக்கலைத்துறை மூலம் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களை இன்று ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து மற்றும் அதிகாரிகள் வழங்கினர்

திருமயம் தொகுதியில் அரிமளம் வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை தொடக்கம்

தோட்டக்கலைத்துறை மூலம் நடமாடும் வண்டிகள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதிக்குள்பட்ட அரிமளம் வட்டாரத்தில் தோட்டக் கலைத்துறை மூலம் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வண்டிகள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரிமளம் வட்டாரத்தைச் சார்ந்த சுற்றுப்புற கிராமங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தை, தோட்டக்கலை துணை இயக்குனர் செல்வராஜ் மற்றும் அரிமளம் வட்டார ஒன்றிய சேர்மன் மேகலா முத்து ஆகியோர் பங்கேற்று நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வண்டிகளை வியாபாரிகளுக்கு வழங்கி தொடக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், அரிமளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் நந்தகுமார் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!