நீதிமன்ற அவதூறு வழக்கு; பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்ற அவதூறு வழக்கு; பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்
X

திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜா திருமயம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்த விழாவில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் தேசிய செயலாளருமான ஹெச் ராஜா கலந்துகொண்டு ஊர்வலமாக செல்ல முயன்றார். அப்போது, போலீசாருடன் நடந்த வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத்தொர்டந்து, நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக ஹெச் ராஜா மீது திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா, மேஜிஸ்ட்ரேட் இந்திராகாந்தி முன்பு இன்று ஆஜரானார்.

இந்த வழக்கை விசாரணை செய்த மேஜிஸ்ட்ரேட் இந்திராகாந்தி அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!