தொட்டியம்பட்டி ஊராட்சியில் கோவிட் தடுப்பூசி முகாம்

தொட்டியம்பட்டி ஊராட்சியில் கோவிட் தடுப்பூசி முகாம்
X

பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சியில் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.


பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சியில் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சியில் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஷைன் லயன் சங்கம் இணைந்து கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு உத்தரவின்படி மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் மருத்துவர் கலைவாணி அறிவுறுத்தலின்படி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் ஆலோசனையின்படி, தொட்டியம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் அப்பகுதி பொது மக்களுக்கு மருத்துவர் ரவிக்குமார் உடல் பரிசோதனை மேற்கொண்டார்.

உடல் பரிசோதனை மேற்கொண்ட பொது மக்களுக்கு செவிலியர் மெர்சி கோவிட் தடுப்பூசியை செலுத்தினர். இதில் ஊராட்சித் தலைவர் கீதா சோலையப்பன், பகுதி சுகாதார செவிலியர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் உத்தமன், பாண்டி, துணைத் தலைவர் சாமிநாதன், ஊராட்சி செயலர் செல்வம், பொன்னமராவதி ஷைன் லயன் சங்கத்தின் தலைவர் மனமுகந்தராஜா, செயலர் தர்மராஜ்,பொருளாளர் கணேசன்,சோலையப்பன், ரவிசந்திரன், சக்திவேல், கார்த்திக், இளையராஜா, ஒய்யப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!