பொன்னமராவதி அருகே ஆலவயல் கிராமத்தில் மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயலில் நடைபெற்ற மஞ்சுவரட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயல் கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு விரட்டுமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1500க்கும்மேற்பட்ட காளைகளும், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.
ஆலவயல், கண்டியாநத்தம், தூத்தூர், உலகம்பட்டி உள்ளிட்ட ஊர்களைச்சேர்ந்த ஊர்பொதுமக்கள் ஜவுளி கொண்டுவந்தனர். ஆலவயல் மிராசு.அழகப்பன் அம்பலம் தலைமையில் நடைபெற்ற போட்டியினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார். சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடங்கினர்.
வெற்றிபெற்ற மாடுகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொன்னமராவதி காவல்துறையினர் காவல் துணைக்கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மஞ்சுவிரட்டில் மாடுபிடிவீரர்கள், பார்வையாளர்கள் என 18 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு மஞ்சுவிரட்டு திடலில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu