அரசுப்பேருந்து இனி பெண்களுக்கே சொந்தம்: திருமயம் திமுக வேட்பாளர்

அரசுப்பேருந்து இனி பெண்களுக்கே சொந்தம்:   திருமயம் திமுக வேட்பாளர்
X
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசுப்பேருந்து அனைத்துக்கும் பெண்களுக்கு சொந்தமாகப் போகிறது என திருமயம் திமுக வேட்பாளர் அதிரடிபேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ரகுபதி, பல்வேறு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறார். பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேட்பாளர் ரகுபதி, ஸ்டாலின் அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு பற்றி பொது மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்.

அதன்படி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு நகரப்பேருந்து அனைத்துக்கும் பெண்களுக்கும் சொந்தமாகப் போகிறது. காரணம் நகரப் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பெண்களுக்கும் பேருந்து கட்டணம் கிடையாது. அதே போல் காசி போன்ற கோயிலுக்கு செல்வதற்கு வருடத்திற்கு லட்சக்கணக்கில் பணம் ஒதுக்கி சுற்றுலா செல்வதற்காக தேர்தல் அறிவிப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். எனவே வருகின்ற ஏப்ரல் 6 அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார்



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!