பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி கிராமத்தில் மீன் பிடி திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி கிராமத்தில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி கிராமத்தில் ஆண்டு தோறும் அறுவடை முடிந்த பின்பு தாழ்பாய் கண்மாயில் உள்ள மீன்களை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடிப்பது, மீன் பிடி திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்

அந்த வகையில் கடந்த 7ஆண்டுகளாக சரியாக மழை பெய்யாத நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையில் கண்மாய் ஓரளவுக்கு பெருகி விவசாயிகள் விவசாயம் செய்துவந்தனர்.

கடந்த மாதம் அறுவடை முடிந்த நிலையில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழாவானது நடந்தது பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி தாழ்பாய் கண்மாயில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் மீன்பிடி உபகரணங்கள் வலை, ஊத்தா, கச்சா, சேலை உள்ளிட்டவை வைத்து சிலேப்பி, கட்லா, விரால், குரவை, கெழுத்தி வகை மீன்களை பிடித்தனர்.

இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதியான பொன்னமராவதி, தொட்டியம்பட்டி, கட்டையாண்டிபட்டி, மயிலாப்பூர், பரியாமருதுபட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்தனர்.

Tags

Next Story