45 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்

45 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்
X

மீட்கப்பட்ட பசுவுடன் தீயணைப்பு வீரர்கள். 

பொன்னமராவதி ஒன்றியம் மறவாமதுரையில் 45 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு.

மறவாமதுரையை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் வெள்ளைக்கன்னு என்பவருக்கு சொந்தமான பசு 45அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் தவறி விழுந்த பசுவை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்த பசுவை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். விரைந்து வந்து பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர் வெள்ளைக்கன்னு மற்றும் அக்கிராம மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story