விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரம் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் தாசில்தார் பிரவீனா மேரி

தேங்கியுள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்திரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் புதிதாக திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து விளைநிலங்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து மூட்டை மூட்டையாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனைக்காக வைத்தனர்.

ஆனால், அதிகாரிகள் அலட்சியப் போக்கால் கடந்த 15 நாட்களாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்து வைத்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப் படாமல் இருந்ததால் ஆயிரக்கணக்கான மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வந்த நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி உள்ள விவசாயிகள் உடனடியாக தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.



ஆனால், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காததால் இன்று அரிமளம் புதுக்கோட்டை செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட விவசாய ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாரான நிலையில் தகவலறிந்து வந்த திருமையம் தாசில்தார் பிரவீனா மேரி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கின்றேன் என கூறியதை அடுத்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!