ரோஸ் தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்
ரோஸ் தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு பெண்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்
ரோஸ் தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு அரிமளத்தில் நடைபெற்றது.
ரோஸ் நிறுவனம் சார்பாக வளர் இளம் பெண்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் திறன் வளர்ச்சி பயிற்சி கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல், உள்ளூரில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாகவும் மற்றும் வளர் இளம்பெண்கள் 170 பேருக்கு நிவாரணப் பொருட்களையும், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். இதில் ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பொன். ராமலிங்கம், அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலாமுத்து, ரோஸ் தொண்டு நிறுவன தலைவர் ஆதப்பன், மாவட்ட கவுன்சிலர் கலைவாணி சுப்பிரமணியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, நகர செயலாளர் நாசர் மற்றும் அனைத்து அணி அமைப்பாளர்கள் ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடன் கலந்து கொண்ட போது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu