வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

வருவாய்  ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் திருமயம் வருவாய் ஆய்வாளரை தாக்கிய மணல் கடத்தல் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை தடுக்கச் சென்ற திருமயம் வருவாய் ஆய்வாளர் செந்தில் குமாரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தல்

வருவாய் அலுவலர் செந்தில்குமாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நேற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை தடுக்கச் சென்ற திருமயம் வருவாய் ஆய்வாளர் செந்தில் குமாரை மணல் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர்.இதையடுத்து செந்தில்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசு ஊழியரை தாக்கிய மணல் கடத்தல் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் ஒரு பகுதியாக புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் சுப்பையா தலைமையில் 50க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தாக்கிய மணல் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு