மத்திய அரசை காங்கிரஸ் கட்சி சார்பில் மாட்டு வண்டி, சைக்கிள் பேரணி

மத்திய அரசை  காங்கிரஸ் கட்சி சார்பில் மாட்டு வண்டி, சைக்கிள் பேரணி
X

காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து மாட்டு வண்டி மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, குளறுபடியான ஜிஎஸ்டி, காஷ்மீர் யூனியன் மாற்றம், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு இவைகளை கண்டித்து சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமசுபுராம் தலைமையில் சைக்கிள் பேரணி மற்றும் மாட்டுவண்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், காரையூர் வட்டாரத் தலைவர் குமார், பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் மணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் தேனூர் கிரிதரன், கைவேலிப்பட்டி காமராஜ், காட்டுப்பட்டி பாஸ்கரன், நகரப்பட்டி செல்வராஜ், தொட்டியம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சோலையப்பன் மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!