போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள்: வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள்: வாகன ஓட்டிகள் அவதி
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் கூட்டமாக நிற்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சாலையோரங்களில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகிறது.

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிற்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி.

புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சாலையோரங்களில் சுற்றித் திரியும் மாடுகள் அதிக அளவில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் மாடுகள் அதிக அளவில் சுற்றி திரிவதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதோடு பேருந்துகளுக்கும் பயணிகளுக்கு இடையூறாக நின்று வருகின்றது.

இதனால் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வணிகர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!