ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம், நடைபெற்றது
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வி.லெட்சுமிபுரத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.இந்த பந்தயமானது சிறிய மாடு பெரியமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது.
புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 44 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.பெரிய மாட்டு வண்டியில் 14 ஜோடிகளும் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 30 ஜோடிகளும் கலந்து கொண்டனர்.பெரிய மாட்டு வண்டிக்கு 9 கிலோ மீட்டரும் சிறிய மாட்டு வண்டிக்கு 7 கிலோ மீட்டர் எல்கை நிர்ணயிக்கப்பட்டு போட்டியான நடைபெற்றது.
சாலையில் துள்ளிக்குதித்து போட்டி போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக 15,001 ரூபாயை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கே. புதுப்பட்டி கே. அம்பாள் காளைகளும், இரண்டாவது பரிசாக 14,001 ரூபாயை பல்லவராயன் பட்டி அழகு காளைகளும், மூன்றாவது பரிசாக 13,001 ரூபாயை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரிமளம் அல்ஜெய்ரா காளைகளும் நான்காவது பரிசாக 7,001 ரூபாயை, நொண்டி கோவில் காளைகளும் தட்டிச் சென்றது.இதேபோல் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu