மேலாளருக்கு கொரோனா: 3 நாட்களுக்கு வங்கியை மூட உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வங்கி மேலாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, 3 நாட்களுக்கு வங்கி மூடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, பொன்-புதுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் வங்கி மேலாளருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வங்கி மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது.

மேலும், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் ஆலோசனையின்படி, சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் முன்னிலையில், டாக்டர் அருண்குமார் வங்கியில் பணிபுரியும் பதினொரு பணியாளர்களுக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளான தனியார் வங்கியில், பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி உத்தரவின்படி, சுகாதார பணியாளர்களை கொண்டு வங்கி முழுவதும் கிருமி நாசி தெளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!