பொன்னமராவதியில் அனைத்து துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொன்னமராவதியில் அனைத்து துறை சார்பில் கொரோனா வைரஸ் தொற்று கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி பேரூந்து நிலையம் அருகே வருவாய் துறை, காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அமரகண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேரூராட்சிதுறை ஊரக வளர்ச்சிதுறை, ஐசிடிஎஸ் அரசு பாப்பாயி மருத்துவமனை, காவல்துறை என அனைத்து துறைகளும் இணைந்து கொரோனா பரவல் தடுப்பு தொடர் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.
தமிழக முதல்வர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக்கிணங்க நடைபெற்ற இவ்விழாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக ஐசிடிஎஸ் பணியாளர்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு நடனம் நடைபெற்றது. அனைவரும் கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு எமதர்ம வேடமிட்டு முககவசம் அணியாவிடில் கொரோனா நோய் தொற்று மற்றும் அதன்விளைவாக மரணம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழாவில் தலைமையேற்று பேசிய அனைத்து துறை அதிகாரிகளும் தமிழக முதல்வர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அறிவுரையின்படி கொரோனா மூன்றாம் அலையினை தவிர்க்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தேவையில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம், அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுதல், சமூக இடைவெளியான 3அடியை பின்பற்றுதல், தடுப்பூசி 2முறை போட்டுக்கொள்ள வேண்டும்.
கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், போன்றவற்றை கடைப்பிடித்தால் கொரோனா தொற்றை தவிர்க்கலாம் எனவும் அரசின் கொரோனா குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடித்தால் கொரோனா பரவலை தவிர்க்கலாம் என பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த நிகழ்வில் அரசுத்துறை அலுவலர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu