தொடர் மழை: தூர்வாரும் பணியை தீவிரப்படுத்திய திருமயம் ஊராட்சி மன்றத்தலைவர்

தொடர் மழை:  தூர்வாரும் பணியை தீவிரப்படுத்திய திருமயம்  ஊராட்சி மன்றத்தலைவர்
X

புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள ஊராட்சி மன்றத்தலைவர் சிக்கந்தர்.

திருமயம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கருங்குளத்தில் நீர் நிரம்பி அருகில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு குளங்களும் நிரம்பி மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், திருமயம் கருங்குளத்தில் நீர் நிரம்பி அருகில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனை அறிந்த ஊராட்சி மன்றத்தலைவர் சிக்கந்தர், இன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அந்த பகுதியில் தூர்வாரும் பணியை முடுக்கிவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் திருமயம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வரத்து வாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை உடனடியாக நேரடியாகச் சென்று பார்வையிட்டு தூர்வாரும் பணியை தீவிரப்படுத்தி வருகிறார். .தன்னுடைய ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று மழைக்காலங்களில் தெருக்களில் மழைநீர் சூழ்ந்ததால் என தினந்தோறும் ஆய்வு செய்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர்ருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story