திருமயம் அருகே கன்டெய்னர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

திருமயம் அருகே கன்டெய்னர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
X
திருமயம் அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் அதிர்ஸ்ட வசமாக உயிர் தப்பினார்.

தூத்துக்குடியிலிருந்து டைல்ஸ் ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி கன்டைனர் லாரி சென்று கொண்டிருந்தது. தஞ்சாவூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் நீதிமன்றம் அருகே சென்று கொண்டிருந்தபோது திருமயம் பிரிவு சாலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தென்காசியை சேர்ந்த ஓட்டுனர் ராமச்சந்திரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான டைல்ஸ் சேதமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!