பொன்னமராவதியில் ஓவியத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

பொன்னமராவதியில் ஓவியத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்
X

பொன்னமராவதியில் தமிழ்நாடு ஓவியத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பொன்னமராவதியில் ஓவியத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழ்நாடு ஓவியத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

பொன்னமராவதி ஒன்றிய ஓவியத் தொழிலாளர்கள் சார்பில் அழகியநாச்சி அம்மன் கோயில் திடலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சசி கணேசன் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச்செயலாளர் மாரிமுத்து மற்றும் சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் ஓவிய தொழிலாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்குவது, பேரிடர்,பெரும் தொற்று காலத்தில் நிவாரண நிதி உதவி வழங்க வேண்டும்,ஓவியத் தொழிலாளர்கள் நலிவடைந்த குடும்பங்களுக்கு அரசு உதவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் பொன்னமராவதி ஒன்றிய ஒவிய சங்கத் தலைவராக சேனா ஆர்ட்ஸ், துணைத்தலைவராக அர்ச்சுனன், செயலாளராக நிலா ஆர்ட்ஸ், துணைச் செயலாளராக ராமசந்திரன், பொருளாளராக வீரையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் செயற்குழு உறுப்பினர்கள் பிறைசூடன், சுரேஷ், சாமி,பாண்டி,செந்தில் மற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த ஓவிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மூத்த ஓவியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!