ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம்

ஊராட்சி மன்ற தலைவர்களின்  கூட்டமைப்பு கூட்டம்
X
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

திருமயத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் மேலப்பனையூர் மேகநாதன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசிற்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வது. முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ரூ 2 லட்சம் நிதி உதவி வழங்குவது ஓ எச் டி ஆபரேட்டர்கள் பணியிடம் காலியாக உள்ளதை பூர்த்தி செய்யவது, பிளம்பர் பீட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பணியாளர்களை அமர்த்துவது ,மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு பணிக்கு சீனியாரிட்டி அடிப்படையில் ஊதியம் வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் திருமயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 33 ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai marketing future