முதல்வர் பிறந்த நாள்: அரசுபள்ளியில் இனிப்பு வழங்கிய அரிமளம் ஒன்றியக்குழுத்தலைவர்

முதல்வர் பிறந்த நாள்: அரசுபள்ளியில் இனிப்பு வழங்கிய அரிமளம் ஒன்றியக்குழுத்தலைவர்
X

தமிழக முதல்வர் பிறந்த நாள் அரசு பள்ளியில் அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அரிமளம் ஒன்றியக்குழுத்தலைவர் மேகலாமுத்து பள்ளியில் மாணவ மாணவிகளுடன் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடினார்

தமிழக முதல்வர் பிறந்த நாள் அரசு பள்ளியில் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

மார்ச் 1ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் முதியவர்களுக்கு உணவு வழங்குதல் இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கோலாகலமாக திமுக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓணாங்குடியில் உள்ள அரசுப் பள்ளியில்அரிமளம் ஒன்றியக்குழுத்தலைவர் மேகலா முத்து தலைமையில் பள்ளியில் மாணவ மாணவிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கிமாணவர்களுடன் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடினார். நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்