முதலமைச்சர் காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

முதலமைச்சர் காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம்: அமைச்சர்  ரகுபதி தொடக்கம்
X

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில்  தமிழக முதலமைச்சரின்  விரிவான மருத்துவ காப்பீட்டு   திட்டத்தின் கீழ் நடைபெற்ற   மருத்துவ முகாமை துவக்கி வைத்த  சட்டத்துறை அமைச்சர்   ரகுபதி

புதுகை ஸ்டார் மருத்துவமனை சார்பில் மழைகால மருத்துவ முகாம் அரிமளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை துவக்கி வைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

தொடர்ந்து வட கிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடர்ந்து பெய்த பலத்த மழையினால், பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் பல்வேறு நோய்கள் பரவும் சூழ்நிலை இருக்கிறது. அதனை தடுக்கும் விதத்தில், தமிழக அரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு ஆணை பிறப்பித்து இருந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், புதுகை ஸ்டார் மருத்துவமனை சார்பாக மழைகால மருத்துவ முகாம் அரிமளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பொன். ராமலிங்கம், அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலாமுத்து, மாவட்ட கவுன்சிலர் கலைவாணி சுப்பிரமணியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, நகர செயலாளர் நாசர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முத்துக்குமார் , மருத்துவர் முனியன், பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், தலைமை ஆசிரியர் சேகர் துணை தலைமை ஆசிரியர் முத்து, தலைமையாசிரியர் மீனா மற்றும் ஒன்றிய பேரூர் கழக பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அரிமளம் ஊராட்சியை ஒட்டியுள்ள பொதுமக்கள் பலர் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பல்வேறு சிகிச்சைகளை பெற்று சென்றனர்.

Tags

Next Story
ai healthcare products