புதுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி தச்சுத்தொழிலாளி உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே  மின்சாரம் தாக்கி தச்சுத்தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்

விராச்சிலையில் மின்சாரம் தாக்கி தச்சு வேலை செய்தவர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள விராச்சிலை கிராமத்தை சேர்ந்த தச்சுத்தொழிலாளி வெள்ளக்கண்ணு. விராச்சிலை கிராமத்தில் இன்று மர வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, மரம் அறுக்கும் கருவியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கியது.இதனையடுத்து அவரது உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.அவரது உடல் திருமயம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பனையப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story