பெண் கல்வி, கண்ணியமான பணிசூழல் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
அரிமளத்தில் பெண் குழந்தைகள் கல்வி மற்றும் வளர் இளம் பெண்களின் கண்ணியமான பணிச்சூழல் குறித்து விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருமயம் அருகே உள்ள அரிமளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலாந்தாய்வு கூட்டத்திற்கு திருப்பூர் மக்கள் அமைப்பு மாநில அமைப்பாளரும் இயக்குனருமான பிரித்திவிராஜ் தலைமை வகித்தார். ரோஸ் ஆர்கனைசேஷன் இயக்குநர் ஆதப்பன் முன்னிலைவகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பவானி, குழந்தைகள் நலக் குழுத்தலைவர் ஸ்டெல்லா புஷ்பராணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர் சசிகலா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அலுவலர்கள் பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றல் மற்றும் பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் கண்ணியமான பணிச்சூழல் குறித்த தகவல் பகிர்வு, கருத்துப்பகிர்வு முன்னெடுத்துச் செல்ல ஒன்றிய அளவில் தடுப்பு குழு அமைத்தல் போன்றவைகளை எடுத்துக் கூறினர். இதில் வழக்கறிஞர்கள் சங்கீதா, சுபாஷினி, ரோஸ் ஆர்கனைசேஷன் பணியாளர்கள், பொது மக்கள், பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu