கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை: ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு
திருமயம் அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்ட ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவில் தெருநாய்கள் சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக சாலைகளில் தெருநாய்கள் வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும்போது நடுவில் சென்று விபத்துக்களை ஏற்படுவதால் தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களால் நிலைதடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் வெறிநாய் கடிப்பதால் அதிக அளவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தினம்தோறும் பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது கோரிக்கை வைத்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியில் 7 பேரை கடித்த வெறி நாய்களை பிடிப்பதற்கு திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் உடனடியாக ஊராட்சி நிர்வாகத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்களை கடித்து குதறிய வெறிநாய் உடனடியாக பிடித்து அப்புறப்படுத்தினர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர்க்கு அப்பகுதியில் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu