புதுக்கோட்டை: சொக்கநாதபட்டியில் 65 வகையான விளையாட்டு போட்டிகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தொகுதிக்குட்பட்ட சொக்கநாதபட்டியில் 65 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சொக்கநாதபட்டியில் மாட்டுபொங்கல், காணும் பொங்கலை முன்னிட்டு பச்சைமிளகாய் சாப்பிடுதல், தண்ணீரில் ஆப்பிள் சாப்பிடுதல், கிரீஸ் கம்பி ஏறுதல், பனைமட்டை பிடுங்குதல் , இளவட்ட கல் தூக்குதல்,வாத்து பிடித்தல், பெண்கள் கபடி ,கோலப்போட்டி உள்ளிட்ட65 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் குடும்பபெண்கள். முதியோர்கள் ஆண்கள் சிறுவர் சிறுமியர் உட்பட அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சொக்கநாதபட்டி ஊர்பொதுமக்கள், இளைஞர்கள் நடத்திய இப்போட்டிகளுக்கு மிக்சி, கிரைண்டர்,மின்அடுப்புகளை, பொங்கல் பானை எவர் சில்வர் பாத்திரம் உள்ளிட்ட பரிசுகளை குடும்ப தலைவிகள் அள்ளி சென்றனர்.
பரிசுகளை பொன்னமராவதி கார்த்திக் அன் கோ மற்றும் ஊர்பொதுமக்கள் வழங்கினர்.
ஏறத்தாழ 20 மணிநேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கம்பக்கத்து ஊரார்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுகளில் அம்மன்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தேவி பழனிச்சாமி, கார்த்தி அன் கோ கார்த்திக்கேயன், கண்டியாநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu